மட்டக்களப்பு – நாசிவன்தீவு கடலில் நீராடிய 7 வயதுடைய இரு சிறுவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டு மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.
வாழைச்சேனை சிறீலங்கா காவற்துறை பிரிவிலுள்ள காவத்துமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் உறவினர்கள் உள்ளிட்டோர் நேற்று மாலை நாசிவன் தீவு கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் நீராடிக் கொண்டிருந்தனர்.
இதன்போது 7 வயதுடைய ஆண் மற்றும் பெண் ஆகிய இரு சிறுவர்களும் கடல் நீரில் மூழ்கியதையடுத்து நீராடிக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி மட்டு. போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
குறித்த பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் குழந்தைகள் காப்பாற்றப்பட்டதையடுத்து உயிர் தப்பியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.