நோர்வேயின் உணவு சோதனையாளர்கள் மேற்கொண்ட சோதனையில் கைசர்(keiser As) என்ற மளிகைக்கடையில் சுகாதார சீர்கேடுகளை கண்டுபிடித்துள்ளனர்
அந்த கடையில் பலகையை சுற்றியுள்ள நிலத்திலும் கடதாசி பெட்களிலும் தூசிபிடித்து அழுக்கு படிந்து காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ள சோதனையாளர்கள் அந்தக்கடையில் அரைவாசிக்கு மேல் மரக்கறிகள் பழங்கள் பழுதாகிப்போய் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மரக்கறி பழங்களை சேமித்து வைக்கும் சேமிப்பு அறை வாசலில் ஆபத்தான பூச்சிகள் செல்வதற்கான வழிகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்
இதேவேளை இக்கடையில் போலாந்து ருசியா பொருட்கள் நோர்வே மொழியிலோ டென்மார்க் மொழியிலோ அல்லது சுவீடன் மொழியிலோ உணவுபொருட்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்படாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ள சோதனையாளர்கள் இக்கடையானது 20 வருடங்களாக இயங்கி வருவதாகவும் இவர்கள் மரக்கறி பழங்களை பல லட்சங்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் Romerikes Blad என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.