மரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு!

You are currently viewing மரணமான 3 வயதுக்குழந்தை “அவந்திகா” வின் மரணம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தது நோர்வே அரசு!

அண்மையில் நோர்வேயில் மரணமடைந்த 3 வயதே நிரம்பிய குழந்தை “அவந்திகா” வின்மரணத்தின் பின்னணியில்வைத்தியசாலையின் நடைமுறைத்தவறுகள் உள்ளதாஎனக்கண்டறிவதற்கான விசாரணைகளை நோர்வே சுகாதாரத்துறை ஆரம்பித்துள்ளது.

ஈரல் மாற்று அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்ட குழந்தை அவந்திகாவின் உடல்நோய் எதிர்ப்புசக்தியை தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில்வைத்தியசாலையின் தீவிரகண்காணிப்பில் இருந்தார்.

கடந்த வருட இறுதியில் திடீரென உடல்நலக்குறைவால் அவதியுற்ற அவந்திகாதொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில்பலதடவைகள் அவந்திகாவின் பெற்றோர் வைத்தியசாலையோடு தொடர்பு கொண்டு அவசர உதவி கேட்டதாகவும்சாதாரண வாந்தி என்றும்அதற்காக வீட்டுவைத்திய முறையொன்றை குறிப்பிட்ட வைத்தியசாலைஅவ்வீட்டு வைத்தியத்தையே தொடரும்படி பெற்றோருக்கு  அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.

இரண்டு நாட்களாக வாந்தியால் அவதிப்பட்ட அவந்திகாவின் உடல்நிலையை வைத்தியசாலை கவனத்தில் எடுத்த்துக்கொள்ளாததால்கடுமையான சுகவீனமடைந்த அவந்திகாவை தமது வாகனத்தில்லேயே வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற பெற்றோர்வழியிலேயே உயிர்காப்பு கோரிக்கை விடுத்ததால்உயிர்காப்பு வண்டி (ஆம்புலன்ஸ்அனுப்பப்பட்டு வழியில் ஓரிடத்தில்வைத்து அவந்திகாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக அவந்திகாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும்தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில்அவந்திகாவின் உயிரிழப்பின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் அசட்டையீனம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை நோர்வேசுகாதாரத்துறை ஆரம்பித்துள்ளது.

குழந்தை அவந்திகாவின் மரணம் ஒஸ்லோ வாழ் தமிழ்

 மக்களிடையே பெருத்த கவலையை தோற்றுவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள