மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்!

You are currently viewing மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்!
மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்! 1
மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்! 2
மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்! 3
மருதங்கேணியில் பதற்றம் குவிக்கப்பட்ட புலனாய்வாளர்கள்! 4

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு நீதிகோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி அதற்கு முன்பாக அமர்ந்திருக்கும் மீனவர்கள்,

‘எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா’ – ‘உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து’ – ‘இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா’ – ‘வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்’ – ‘எமது கடல் எமக்கு வேண்டும்’ – ‘கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார்’ – ‘மீனவர்களை கொல்லாதே’ போன்ற கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அப்பகுதியில் காவல்துறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மெற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய நாள் கடற்கரைக்கு பார்வையிடச்சென்ற துரோகி டக்கிளஸ் 30 வருடத்திற்கு முன் நான் ஏற்றுக்கொள்ள சொன்ன 13ம் திருத்தசடடத்தினை ஏற்றுக்கொண்டிருந்தால் இந் நிலை வந்திருக்காது என பனையால் விழுந்தவர்களை மாடு ஏறிமிதித்ததுபோல் அவமதித்துள்ளார் இந்த நிலைக்கு யார் காரணம் என சோகத்தில் மூழ்கிய மக்களிடம் தனது துரோக அரசியலை இடம் பொருள் ஏவல் தெரியாது பேசியது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

பகிர்ந்துகொள்ள

Leave a Reply