மருத்துவமனை ஊழியர்கள் 40 பேர் தனிமைப்படுத்தலில்!

  • Post author:
You are currently viewing மருத்துவமனை ஊழியர்கள் 40 பேர் தனிமைப்படுத்தலில்!

Hamar மருத்துவமனையிலுள்ள அறுவைச் சிகிச்சைப்பகுதி ஒன்றில், இன்று திங்கள் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், சுமார் 40 ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை கூறியுள்ளது.

நோயாளி வேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும், அனுமதியின்போது கொரோனா தொற்றின் அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை என்றும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரே நோயாளிக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்றும் மருத்துவமனையிலிருந்து ‘Line Fuglehaug‘ கூறியுள்ளார்.

குறிப்பிட்ட நோயாளியுடன் தொடர்பிலிருந்த, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அல்லது அனுமதிக்கப்பட்டுள்ள பிற நோயாளிகள் தொடர்பு கொள்ளப்பட்டு அவதானிக்கப்படுவதுடன், மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதிக்கப்படுகின்றார்கள் என்று ‘Line Fuglehaug‘ மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள