மருத்துவர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாத நிலையில் பணிப்புறக்கணிப்பு!

You are currently viewing மருத்துவர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாத நிலையில் பணிப்புறக்கணிப்பு!

மருத்துவர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படாத நிலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!
முல்லைத்தீவு மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நீக்கக் கோரி  மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் அடையாள பணிப் புறக்கணிப்பு ஒன்றினை 11.08.2020 மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மிக நீண்ட நாட்களாக நிலவி வரும் வைத்தியர் பற்றாக்குறையை போக்கக்கோரி உரிய அதிகாரிகளிடம் பலதடவைகள் கோரியும் சாதகமான பதில் எதுவும் கிடைக்கப் பெறாத நிலையில்  மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணிவரை பணிப்புறக்கணிப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் மருத்துவ சேவைப்பணிப்பாளருடன்  கலந்துரையாடியபோது 20.09.2019 ஆம் ஆண்டு யாழ்போதன வைத்தியசாலை பணிப்பாளருக்கு குறைந்தது நான்கு உள்ளக பயிற்சி நிறைவு செய்து நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை மாற்று தீர்விற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்குமாறு அறிவிக்கப்பட்டு இன்றுவரை இந்த மருத்துவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இதுவிடையம் குறித்து சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கம் இடையில் பேச்சுக்கள் நடைபெற்றன இருந்தும்  நான்கு உள்ளக பயிற்சி நிறைவு பெற்ற நியமனத்திற்காக காத்திருக்கும் வைத்தியர்களை யாழ்போதனா வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு விடுவிக்கும் வரை 21.07.2020  அன்று தொடக்கம் மருத்துவமனையின் அனைத்து பொது மருத்துவ சேவையினை நிறுத்தி தொழில் சங்க போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள் 
இன்னிலையில் தேர்தலின் பின்னான காலத்தில் இதுவரையும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வைத்தியர்கள் எவரையும் விடுவிக்கப்படாத நிலை தொடர்ந்து செல்கின்றது.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இறுதியாக உள்ளக பயிற்சி நிறைவு செய்த வைத்திய அணியில் இருந்து தகுதி பட்டியலில் கீழ் வரிசையில் உள்ள நான்கு வைத்தியர்களை முல்லைத்தீமாவட்ட பொது வைத்தியசாலைக்கு விடுவிக்குமாறு தெளிவாக கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள போது அவர் இதுவரை விடுவிக்கவில்லை இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பினை இன்று (11.08.2020) மேற்கொண்டுள்ளார்கள்
இந்த பணி புறக்கணிப்பு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அதிகளவான நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
மாவட்ட மருத்துவமனையில் நிலவும் தொடர் மருத்துவ பற்றாக்குறை காரணமாக மாதாந்த சிகிச்சை பெறுபவர்கள் ,மற்றும் வெளிநோயாளர்கள் என பெருமளவானவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.
புதிய அராசங்கம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் புதிய அமைச்சர்கள் இந்த மருத்துவமனையில் நிலவும் குறைபாடுகளை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள