தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜெஸ்வந்தினி பி. மயூரனுக்கு தகவல் தொடர்பு விருது 2022 இன்று வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேலாளர் ஜெஸ்வந்தினி பி.மயூரன் 2022 ஆம் ஆண்டிற்கான தொடர்பாடல் விருது ஸ்ரவங்கர் பல்கலைக்கழக மருத்துவமனையினால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது இதனை அந்த மருத்துவமனை தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
ஜெஸ்வந்தினி பி. மயூரன் மனநல மருத்துவத்தில் நிபுணராகவும் மனநல அவசரப்பிரிவின் மருத்துவ மேலாளராக பணியாற்றி வருகின்ற அதேவேளை
பல ஆண்டுகளாக விவாத இடுகைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் அடையாளம், கலாச்சார பின்னணி மற்றும் மனநலம் பற்றிய சிறந்த படைப்புகளை உருவாக்கியதன் காரணமாக தகவல் தொடர்பாடல் பரிசைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனநல மருத்துவத்தில் மூத்த மருத்துவராக தனது பணியின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், ஜெஸ்வந்தினி பி. மயூரன் அதை ஒரு வாழ்க்கைப் பாதையாகக் கருதி அதிகமான மக்களுக்கு பங்களிக்க முடியும் என்று நம்புகிறார்.
இந்த பரிசை நம்ப முடியாது இருப்பதாகவும் காரணம் தான் எழுதுவது தனக்கு முக்கியமானது என்றும் அதனால் எழுத்துப்பணியை விரும்பி செய்வதாகவும் தெரிவித்த அவர் இப்பரிசு கிடைத்தது தனக்கு மகிழ்சி எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பரிசானது இன்று செவ்வாய்கிழமை ஸரவங்கர் பல்கலைக்கழ மருத்துவமனையின் இயக்குனர் Helle Schøyen அவர்களால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அனைத்து தமிழ் மக்களின் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
https://helse-stavanger.no/om-oss/nyheter/formidlingsprisen-2022-til-jeswanthiny-p-mayooran