மருந்துகளையும், தடுப்புமருந்துகளையும் தயாரிக்கும் நிறுவனங்கள்மீது இணையவழி தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக “Microsoft” நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி நிறுவனங்கள் தம்வசம் வைத்திருக்கும் மருந்துகள் தொடர்பான பெறுமதியான தகவல்களை திருடிக்கொள்ளும் முயற்சியாக நடத்தப்பட்ட இவ்விணையவழி தாக்குதல்களின் பின்னணியில் ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளே இருப்பதாகவும் “Microsoft” நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிலிருக்கும் மருந்து தயாரிப்பு மற்றும் தடுப்பு மருந்து ஆய்வு நிறுவனங்களின் கணினிவலையமைப்புமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியில், “கொரோனா” தடுப்பு மருந்து தொடர்பான முக்கிய தகவல்களை பெரும் நோக்கமே பிரதானமாக இருந்திருப்பதாக தெரிவிக்கும் “Micrisoft” நிறுவனம், எனினும் மேற்படி இணையவழி தாக்குதல்களின்போது, தாக்குதலாளிகள் எதிர்பார்த்த தகவல்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கிறது.