மறுபடியும் சீன சந்தைகளில் வெளவால், பூனை, முயல் இறைச்சிக்கு கிராக்கி!

You are currently viewing மறுபடியும் சீன சந்தைகளில் வெளவால், பூனை, முயல் இறைச்சிக்கு கிராக்கி!

முழு உலகையே ஆட்டங்காண வைத்துள்ள கொரோனாவின் பிறப்பிடம், சீனாவின் வுஹான் நகரமாகும். முழுவதுமாக ஸ்தம்பித்துக் கிடந்த சீனா, தற்போது தான் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புகிறது.

இந்நிலையில்,  பொதுவாக சீனாவிலேயே பாம்பு, பூனை, வெளவால்களின் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அங்குள்ள இறைச்சி சந்தையில் இருந்து தான் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் பரவியதாக செய்திகள் வெளியாகின இந்த சந்தையில் இறால் விற்கும் பெண் ஒருவர் தான் உலகின் முதல் கொரோனா நோயாளி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இறைச்சிக்கடைகள், சந்தைகளுக்கு தடை விதித்திருந்த நிலையில், தற்சமயம், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து, மீண்டும் இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

குயிலின் மற்றும் டாங்குவான் பகுதிகளில் உள்ள ஒரு இறைச்சி சந்தைகளில் நாய், பூனைகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டு சலுகை விலைக்கு வழங்கப்பட்டன.

பாரம்பரிய மருந்தாக கருதப்படும் வெளவால், தேள், முயல் மற்றும் தோல் உரிக்கப்பட்ட வாத்துகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

பகிர்ந்துகொள்ள