மலசலதாள் விளம்பரங்கள் நிறுத்தம்!

You are currently viewing மலசலதாள் விளம்பரங்கள் நிறுத்தம்!

ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடம் நிலமை தொடர்பாக அதிகமான மலசலகூடத்தாள்கள் விளம்பரங்களை வெளியிடுவதை நாங்கள் அவதானித்தோம், என தகவல் தொடர்பு ஆலோசகர் Adele Blystad VG பத்திரிகைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதாக அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

அதனால் இந்த வகையான விளம்பரங்களை மூட வேண்டிய கட்டாயத்தில் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இதைச் செய்வதன் மூலம், மக்கள் மத்தியில் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை பரவுவதைத் தவிர்ப்போம்” என்று Adele Blystad அவர்கள் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வாய்ப்பாதுகாப்பு மூடிகள், தூசி முகமூடிகள் மற்றும் கிருமிநாசினி தயாரிப்புகளுக்கான விளம்பரங்களைக் கண்டறிவது நிறுத்தப்பட்டது.  மொத்தத்தில், இணைய கடைகள் திங்கள் காலை வரை 850 க்கும் மேற்பட்ட விளம்பரங்களை மூடியுள்ளது.

பகிர்ந்துகொள்ள