அதிபர்,ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வைக் வழங்க வேண்டும் என கோரி மலையகத்தின் பெரும்பாலான நகரங்களில் நேற்று (3) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய,மொனராகலை, ஹல்தும்முல்ல, பசறை, புஸல்லாவை, தலவாக்கலை,புளத்கொஹுபிட்டியபசறை, லுணுகல, கோணக்கலை, பதுளை, ஹாலிஎல உள்ளிட்ட பல இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“ஆட்சியாளர்களே அதிபர்,ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வை வழங்கு, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தாதே, பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறே இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் ஈடுப்பட்டனர்.