மல்லாவியில் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 128 மணித்தியாலங்கள் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளார்
மல்லாவியில் உள்ள தொழில்நுட்ப கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில், international warriors book of world records ஒழுங்கமைப்பில் இந்த உலக சாதனைக்கான நடன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த தயாபரனே அந்த உலக சாதனையை நிலைநிறுத்தியிருக்கிறார்.
இந்த நடனத்தை இந்தியாவில் இருந்து கண்காணிப்பு கமாரா மூலமாக international warriors book of world records அமைப்பினர் பார்வையிட்டிருந்தனர்.
இந்த நிகழ்வு லயன் யூட் நிமலனின் நெறியாள்கையில் சர்வதேச சட்ட நியதிகளுக்கமைவாக 6 நாட்களாக இடம்பெற்றுள்ளது.
நிகழ்வின் இறுதியில் போட்டியாளர் தயாபரனுக்கான கௌரவம் வழங்கப்பட்டு அவருக்கான மின்னிதழ் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.