மாங்குளத்தில் விபத்து மூவர் பலி.

You are currently viewing மாங்குளத்தில் விபத்து மூவர் பலி.

முல்லைத்தீவு மாங்குளம் பகுதிக் உட்பட்ட பனிச்சங்குளம் பகுதியில் இன்று(15.08.2023) செவ்வாய்க்கிழமை
அதி காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

பனிக்கன்குளம் ஏ-9, நெடுஞ்சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றுடன் கயஸ் வான் ஒன்று பக்கவாட்டாக
மோதியதுடன் அதே வான் முன்னால் சென்ற பாரவூர்தியுடனும் நிலைதடுமாறி மோதியதனாலேயே இவ்அனர்த்தம் நிகழ்ந்ததாகத்தெருவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலதிக விபரங்கள் தெரியவரவில்லை.

மாங்குளத்தில் விபத்து மூவர் பலி. 1

மாங்குளத்தில் விபத்து மூவர் பலி. 2

இதேவேளை நேற்றைய நாள்[14.08.2023 ]யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் அமைந்துள்ள வாகன ஒளிச்சமிக்சையில் விதிமுறையை மீறி பயணித்த கன்ரர் ரக கனரக வாகனம் மோதியதில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 52,அகவையுடைய,நாவேந்தன்-கௌரிமலர், எனத் தெரிவிக்கப்பட்டது.

இவரது கணவருடன் உந்துருளியில் பயிணிக்கையிலே விதிமுறையை மீறிய கனரக வாகனம் இவர்கள் மீது மோதியுள்ளது கணவர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

மாங்குளத்தில் விபத்து மூவர் பலி. 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply