தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை சிறீலங்கா காவற்துறையினரல் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது!
