மாணவியிடம் அங்க சேட்டை – இராணுவச் சிப்பாயை நையப்புடைத்த வசாவிளான் மக்கள்!

You are currently viewing மாணவியிடம் அங்க சேட்டை – இராணுவச் சிப்பாயை நையப்புடைத்த வசாவிளான் மக்கள்!

யாழ்ப்பாணம் -வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயை அப்பகுதிமக்கள் நையப்புடைத்து  சிறீலங்கா காவற்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திங்கட்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில் பலாலிப் பொலிஸார் மற்றும் இராணுவப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனிமையில் சென்ற பாடசாலை மாணவியை பின்தொடர்ந்த குறித்த இராணுவ சிப்பாய் அங்கசேஷ்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி குரலெழுப்பிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் குறித்த இராணுவ சிப்பாயை நையப்புடைத்து சிறீலங்கா காவற்துறையினரிடம்  ஒப்படைத்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments