திருகோணமலையில் மாணவியை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கைானது கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, கைது செய்யப்பட்டவர் 33 வயதுடைய தீர்த்தக்கரை சிலாவத்தையில் வசிக்கும் கடற்றொழில் சங்க தலைவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் உள்ள மனைவியின் சித்தி வீட்டிற்கு போய்வருவது வழக்கமான நிலையில் சித்தியின் மகளான 15 வயதுடைய பாடசாலை மாணவியை அதிக நாட்களாக தகாதமுறைக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், மாணவிக்கு உடல் நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக குறித்த மாணவி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தபட்டபோது அவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த மாணவியிடம் சிறீலங்கா காவற்துறையால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முல்லைத்தீவை சேர்ந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.