கொரோனா வைரஸ் 10 வெவ்வேறு வகைகளாக மாற்றமடைந்துள்ளதும், அதில் “A2a” என்ற ஒரு வகை வைரஸ் மட்டுமே தற்போது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
ஒரு வகை கொரோனா வைரசுக்கு கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து, மற்றொரு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகமே?
மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள தேசிய உயிர் மரபியல் ஆராய்ச்சிக் கழகத்தைச் (National Institute of Biomedical Genomics in India) சேர்ந்த விஞ்ஞானிகள், 55 நாடுகளில் இருந்து 3,600க்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்துள்ளனர். அதில், O, A2, A2a, A3, B, B1 என 10 வகையான கொரோனா வைரஸ்கள் உலகம் முழுவதும் பரவியிருப்பது தெரியவந்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதில், நான்கு மாதங்களுக்கு முன்பு “O” வகை வைரஸ் பரவியிருந்தாலும், அதை தற்போது “A2a” வைரஸ் பாதிப்பு முந்தியுள்ளதாக கூறும் விஞ்ஞானிகள், குறைந்த நாட்களில் அதிவேகமாக பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த வகை வைரஸ்தான் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒரு வகை கொரோனா வைரசுக்கு கண்டுபிடிக்கப்படும் தடுப்பு மருந்து, மற்றொரு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறியுள்ளனர்.