மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022

You are currently viewing மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022

டந்த சனிக்கிழமை அன்று (07.05.2020) டென்மார்க்கில் உள்ள அனைத்து மாலதி தமிழ்க் கலைக்கூடங்களும் இணைந்து   நடாத்திய கலைநிகழ்வு Herning  நகரில், சோழர் மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து 2ஆம் லெப். மாலதியின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது.  முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களையும், தேசத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றி, மலர்வணக்கம் செலுத்தி, அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 1

இக் கலைநிகழ்வில் கவிதை, பேச்சு, எழுச்சிப்பாட்டு, எழுச்சி நடனம், கும்மி, கோலாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, மழலைகளின் பாட்டு, கதை என்பன மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஒன்றாக திரண்டிருந்து நிகழ்வுகளை கண்டு களித்தனர்.

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 2

 நிறைவாக நிகழ்ச்சிகளை வழங்கிய  அனைத்து மாணவர்களிற்கும் நினைவு சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற  தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 3
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 4
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 5
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 6
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 7
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 8
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 9
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 10
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 11
மாலதி தமிழ்க் கலைக்கூடம் டென்மார்க் நடாத்திய கலைநிகழ்வு 2022 12
பகிர்ந்துகொள்ள

Leave a Reply