வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான மாவீரன் பண்டாரவன்னியனின் 217 ஆம் ஆண்டு வெற்றி நாள் நிகழ்வுகள் 25.08.200 அன்று நடைபெறவுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை கலாச்சார விழா ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் வன்னி இராச்சியத்தில் வெல்லமுடியாத தளதிபதியாக பண்டாரவன்னியன் காணப்பட்டான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தளபதியான வொன் டிரிபெர்க், பண்டாரவன்னியனின் வீரத்தினைப் பாராட்டியும் தனது பெருமையைப் பறைசாற்றவும். ஒட்டுசுட்டான் கற்சிலை மடு என்ற இடத்தில் யுத்தம் நடந்த இடத்திலே நடுகல் ஒன்று அமைத்தான்.
அதிலே 1803 ம் ஆண்டு ஆசுஸ்ட் மாதம் 31 ம் திகதி இந்த இடத்திலே தன்னால் பண்டார வவ்னியன தோற்கடிக்கப்பட்டதாக எழுதி சிலைஒன்றினை நாட்டிவைத்துள்ளான்.
மாவீரன் பண்டாரவன்னியன் 25.08.1803 அன்று முல்லைத்தீவில் உள்ள ஆங்கிலேயர்களின் கோட்டையினை கைப்பற்றிய வெற்றிநாளினை பண்டாரவன்னியன் வெற்றி நினைவுநாளாக மக்கள்கடைப்பிடித்து வருகின்றார்கள்.