

தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடிவரும் உரிமை அரசியலுக்காக பல்லாயிரக்கணக்கில் உயிர்விதைப்புகளும் தியாகங்களும் நடைபெற்று நாம் சிறீலங்காவால் இனவழிப்பிற்கு உள்ளாகி கடந்த 12 ஆண்டுகளாக தமிழின அழிப்பின் நீதிக்காக போராடிவரும் நிலையில் தமிழ்மக்களின் இதுவரைகால விடுதலைக்கான அரசியலை விற்றுப்பிழைக்கும் அரசியல்வாதிகளின் சதிமுயற்சிகளை முறியடித்து சரணாகதி அரசியலில் இருந்து தமிழ்மக்களின் விடுதலை அரசியலை நேர்மையாக முன்னெடுக்க உலகத்திற்கு மீண்டும் எமது வேணவாவை எடுத்துரைக்க மாவீரர்களை மறவாத மக்களாய் எதிர்வரும் 30ம் திகதி யாழ் நல்லூரில் நடைபெறும் போராட்டத்திற்கு அகவை பேதமின்றி அணிதிரள்வோம்.