வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழர்களின் விடிவிற்காக உயிர்நீர்த்த தங்கள் பிள்ளைகள் பெற்றோர்கள் உறவுகளை நினைவுகூரும் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்யகோரி பொலீசார் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பித்துள்ளன.
இன்னிலையில் இந்த வழக்கின் விசாரணைகளின் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக யாழ்,முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றங்கள் அறிவித்துள்ளன
சிறீலங்காவின் சட்டமாஅதிபர் திணைக்களத்தினால் நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையினை ஏற்ற மன்றுகள் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள தடை விதி;த்துள்ளன.
பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்த செய்யமுடியாது கோப்பாய்,யாழ் பல்கலைக்கழகங்களில் நினைவிற்கொள்ளகூடாது என 37 பேருக்கு யாழ்ப்பாணத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாளினை நினைவிற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த தடை உத்தரவினை மீள்பரிசீலனை செய்ய தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்,முன்னால் மாகாணசபை உறுப்பினர்,பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் தொண்டர்கள் பலர் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்தி வழக்கினை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கும் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் தீர்ப்பினை மன்று இன்று அறிவித்துள்ளது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நினைவேந்தலை செய்ய தடை உத்தரவுடன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 46 பேருக்கு வழங்கப்பட்ட தடை உத்தரவும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு மன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.