“வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு. தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.”என வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் தியாகத்தையும் நினைவுகளையும் நீக்க முடியாது என்பதை உணர்ந்த பேரினவாத கட்சி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கவே இக் கருத்தை வெளியிட்டுள்ளது.