மாஸ்கோ தாக்குதலின் பின்னணி: புடின் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

You are currently viewing மாஸ்கோ தாக்குதலின் பின்னணி: புடின் முன்வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டு!

மாஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் தீவிரவாத இஸ்லாமியக் குழு இருப்பதாக ரஷ்ய ஜனாிதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாஸ்கோவில் உள்ள குரோகஸ் நகர மண்டபத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய 11 பேர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்றுமுன்தினம் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நால்வரைத் தவிர, மேலும் மூன்று பேர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு மே 22 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் என்றும், தந்தை தஜிகிஸ்தான் குடிமகன் என்றும், இரண்டு மகன்கள் ரஷ்யாவின் குடிமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய உலகம் என்ற நோக்கத்துடன் பல நூற்றாண்டுகளாகப் போரை நடத்தி வரும் தீவிர இஸ்லாமிய அமைப்பு இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாகக் கூறினார்.

ஆனால் இஸ்லாமிய அமைப்பு ஐஎஸ் என்று அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுடன் இந்த கொடூர தாக்குதலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று புடின் கூறியதாக கூறப்படுகிறது.

மேலும் ‘உண்மையில் கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம். இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டு பயங்கரவாத கும்பல் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றது ஏன்..? உக்ரைனில் அவர்களுக்காக யார் காத்திருந்தார்கள்?’ எனவும் புடி கேள்வியெழுப்பியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply