பிரான்சில் கொரோனா வைரஸ் (COVID-19) நோய் தாக்கம் அதிகரித்துள்ளமையால் எதிர்வரும் சில நாட்களில் மிகவும் மோசமான கொரோனா நோயின் பரவலை நாம் சந்திக்க நேரிடும், பிரான்ஸ் மீது கொடூரமாக வைரஸ் நோய் தொற்ற உள்ளது” என பிரான்ஸ் பிரதமர் எட்வார்ட் பிலிப் எச்சரித்துள்ளார்.
“நாம் மிக நீண்டதொரு சிக்கலிற்குள் சிக்கி உள்ளோம். மீள்வதற்கு நீண்ட காலம் எடுக்கும். இந்தச் சுகதாரச் சீர்கெட்டு நிலையிலிருந்து அவ்வளவு எளிதாக மீண்டு விட முடியாது. மிகவும் உறுதியுடன் அனைவரும் இருக்கவேண்டும்” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த மிகவும் ஆபத்தான சூழ்நிலையில், மிகவும் முக்கியமான அமைச்சகங்களின் ஆளுமைகளை உள்துறை அமைச்சகத்தில் ஒன்று திரட்டியுள்ளார் பிரதமர்.