மிதக்கும் இராணுவ மருத்துவமனையை இலங்கைக்கு அனுப்புகிறது சீனா!

You are currently viewing மிதக்கும் இராணுவ மருத்துவமனையை இலங்கைக்கு அனுப்புகிறது சீனா!

சீன இராணுவத்தின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ விரைவில் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள சூஷானில் உள்ள இராணுவத் துறைமுகத்திலிருந்து மிஷன் ஹார்மனி – 2024 க்காக புறப்பட்டது.

பயணத்தின் போது, கப்பல் இலங்கை உட்பட 13 நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளது. இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைதிப் பேழைக்கான 10வது மிஷன் ஹார்மனி ஆகும்.

‘அமைதிப் பேழை’ என்பது உள்ளுர் மக்கள், சீன நிறுவனங்களில் உள்ளவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் ஆகியோருக்கு பொதுவான மற்றும் பரவலான நோய்களுக்கான இலவச நோயறிதல் மற்றும் சிகிச்சையை வழங்கும் சேவையாகும்.

கடல்சார் மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர், இதில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply