முக்கிய அணை ஒன்றை ரஷ்யா சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது உக்ரேனிய மக்கள் குடிநீருக்காக தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் நோவா ககோவ்கா அணை சேதமடைந்துள்ளது. இதனால் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே 4.8 பில்லியன் கேலன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
Kherson நகரின் சில பகுதிகள் முற்றிலும் நீருக்கடியில் காணப்படுகிறது. பல குடியிருப்புகளின் கூரை மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு எஞ்சியுள்ளது. ஆனால் சேதமடைந்துள்ள அணையில் இருந்து தண்ணீர் தற்போதும் வெளியேறிய நிலையில் உள்ளது.
வெள்ளத்தால் 42,000 பேர் ஆபத்தில் இருப்பதாக உக்ரைன் மதிப்பிட்டுள்ளது. மக்கள் கூரை மீதேறி தப்பிக்க அதிகாரிகள் தரப்பு அறிவுறுத்தி வருகின்றனர். சில பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பரிதாப நிலையில் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் குடிநீர் மாசுபாடு பற்றிய அச்சமும் அதிகரித்து வருகிறது. பெருவெள்ளம் கல்லறை பகுதிகளில் புகுந்துள்ளதால் சடலங்களால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி அணையில் இருந்து 150 டன் இயந்திர எண்ணெய் டினிப்ரோ ஆற்றில் கலந்துள்ளது.
நேற்று நகர மறுத்து வீடுகளில் தங்க விரும்பிய பொதுமக்கள் சிலர் தற்போது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். கெர்சன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேற்ற உக்ரேனிய அதிகாரிகள் முயற்சி எடுத்துள்ளனர்.