“பெட்ரோல்” மற்றும் “டீசல்” எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களை விடுத்து, மின்சக்தியில் இயங்கும் வாகன உற்பத்தியை விரைவுபடுத்த முடிவு செய்துள்ளதாக உலகப்புகழ் பெற்ற ஜேர்மனிய நிறுவனமான “BMW /Bayerische Motoren Werke” தெரிவித்துள்ளது.
“BMW” நிறுவனத்தின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் “Mini”, “Rolls – Royce” போன்ற நிறுவனங்களும் இனிமேல் தங்களது சொந்த நாட்டில் மின்சக்தி வாகனங்களுக்கான இயந்தரங்களையே தயாரிக்குமெனவும், இதேவேளை, “பெற்றோல்” மற்றும் “டீசல்” எரிபொருட்களில் இயங்கும் வாகன இயந்திரங்களின் உற்பத்திகள் வேற்று நாடுகளுக்கு, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஒஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இடமாற்றம் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.