புத்தளம் – பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் இரும்பு கம்பியை தூக்கி சென்ற போது, அதன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.