முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் கிராமசேவையாளர் பிரிவில் தேங்காய் மட்டையினை பயன்படுத்தி தும்பு எடுக்கும் இயந்திரம் மாற்று வலுவுள்ளவர்களுக்கு வாழ்வாதாரமாக வழங்கப்பட்ட போதும் தனியான மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியாத பொருளாதார நிலமை காரணமாக வழங்கப்பட்ட வாழ்வாதாரம் திரும்பும் நிலைக்கு செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கைவேலிப்பகுதியில் விஜயறூபன் ராதா என்ற பெண் போரால் பாதிக்கப்பட்ட மாற்று வலுஉடையவர்கள் இவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தேங்காய் மட்டையினை பயன்படுத்தி தும்பு எடுக்கம் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரம் பயிற்றப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட போது
அவற்றுக்கு மின்சாரத்தினை தனி இணைப்பாக பெற்றுக்கொள்வதற்கு 27 ஆயிரம் ரூபா பணம் தேவையான நிலையில் இதனை நிவர்த்தி செய்யமுடியாத நிலையில் குறித்த குடும்பங்களின் பொருளாதாரம் காணப்படுவதாக தெரிவித்த அவர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேங்காய் மட்டைகளை பயன்படுத்தி தும்பு எடுத்து அதனை பசளைக்காக அவுஸ்ரேலியாவிற்கு ஏற்றமதி செய்வார்கள்
இந்த செயற்பாட்டினை மேற்கொள்பவர்கள் தற்போது எங்களிடம் வந்த பசளையினை கேட்கின்றார்கள் வள்ளிபுனம்,மற்றும் கைவேலிப்பகுதியில் இவ்வாறு இரண்டு இயந்திரங்கள் மின்சார இணைப்பு இல்லாமல் இயக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.
ஒரு இயந்திரத்தில் மூன்று பேர்வரை வேலை செய்யலாம் எங்கள் குடும்பங்ககளின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு மின்சார இணைப்பினை யாராவது ஏற்படுத்தி கொடுப்பார்களானால் அறு பேர் வரை வேலைவாய்ப்பினை பெற்று இயங்ககூடியதாக இருக்கும் என்றும் ராதா என்ற மாற்று வலுவுடைய குடும்ப பெண் தெரிவித்துள்ளார்.