மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்!

You are currently viewing மின்னல் தாக்கியதில் பற்றி எரிந்த தென்னை மரம்!

முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில் இடிமின்னல் தாக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், நேற்றைய தினம் (22) உடையார் கட்டு சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் மின்னல் தாக்குதலுக்கு இலக்கான தென்னைமரம் ஒன்று பத்தி எரியும் காட்சி பதிவாகியுள்ளது.

சுதந்திரபுரம் சந்திக்கு அருகில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று காணப்படுகின்றது. இந்த கோபுரத்தில் தாக்கிய மின்னல் அருகில் உள்ள வீடொன்றிற்கு சொந்தமான தென்னை மரம் ஒன்றின் மீதும் தாக்கியுள்ளது.

அதேவேளை, வீட்டில் ஆட்கள் இல்லாத காரணத்தினால் வேறு எதுவிதமான சேதமும் ஏற்படவில்லை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply