சந்தேகநபர்களையோ, அல்லது குற்றவாளிகளையோ நெருங்குவதற்காக, மின்சார அதிர்ச்சியை கொடுக்கக்கூடிய சாதனங்களை பாவிப்பதற்கான அனுமதியை, நோர்வே நாடாளுமன்றம் நோர்வே காவல்துறைக்கு வழங்கியுள்ளது.
நீதியமைச்சுடனான கலந்துரையாடல்கள் அடிப்படையிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இவ்வைகையான சாதனங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து சோதனை செய்யப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதீதமான சந்தர்ப்பங்களில், சந்தேக நபர்களை கைது செய்யவும், சட்டவிரோதமான ஒன்றுகூடல்களை கலைக்கவும் “மிளகுத்தூள்” பாவனையை நோர்வே காவல்துறை பயன்படுத்தி வரும் நிலையில், குறித்த மின் அதிர்வுகளை கொடுக்கக்கூடிய சாதனங்களின் பாவனை, காவல்துறையின் பணிகளை இலகுவாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.