மியன்மாரில் (Myanmar) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 144 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மியன்மாரின் மெண்டலே பகுதியில் 7.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேவேளை, தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) வெள்ளிக்கிழமை 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அத்தோடு, தாய்லாந்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இன்று (28) 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்திலும் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.