மிருசுவிலில் எட்டு பொதுமக்களை கொலை செய்த படைவீரருக்கு பொதுமன்னிப்பை வழங்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு எதிராக மூன்று நீதிமன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்ட வழக்கு குறித்த பத்து பக்க ஆய்வொன்றை வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பொதுமன்னிப்பை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமன்னிப்பு வழங்கி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை சிறையிலிருந்து விடுதலை செய்யும் தீர்மானத்தை இலங்கை ஜனாதிபதி இரத்து செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சார்ஜன்ட் ரத்நாயக்க இழைத்த குற்றங்களிற்கு ஈடான தண்டiனையை அவர் அனுபவிப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அவரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றவேண்டியதில்லை என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபை சார்ஜன்ட் ரத்நாயக்காவிற்கான தண்டனையை ஆயுள் தண்டனைiயாக ஜனாதிபதி மாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மிருசுவிலில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு நஸ்ட ஈடு உட்பட பயனுள்ள இழப்பீடுகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்ககப்படுவதை உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அவர்கள் அரச அதிகாரிகளினால் துன்புறுத்தல்கள், மிரட்டல்கள்,போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுவதை தடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பத்து பக்க ஆய்வில் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு மோதலின் போது ஆயுத படையை சேர்ந்த ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு சில வழக்குகளில் ஒன்றில், நீதியை மாற்றியமைப்பதற்காக கொரோனா வைரஸ் சூழ்நிலை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதை விரிவாக ஆராய்ந்துள்ளது.