யாழ்ப்பாணம் தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் மீசாலை ஐயா கடையடிப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் மீது முச்சக்கரவண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்து காணப்பட்ட அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு இன்று அவர் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அழைத்து வரச் சென்றபோதே அவர் விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தால் உயிரிழந்தவர் மீசாலை வடக்கினைச் சேர்ந்த சிறீதரன் செல்வராணி (வயது 52) என்று தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச் சென்றுள்ள நிலையில் முச்சக்கரவண்டி குறித்த தகவல் தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.