கடந்த 24 மணிநேரத்தில் உலகத்தில் அதிகூடிய கொரோனா தொற்றை(89 190) பிருத்தானியாவும் கொரோனா தொற்றில்(66 887) இரண்டாம் இடத்தினை அமேரிக்காவும் தொற்றின் வேகத்தில்(58536) மூன்றாம் இடத்தில் பிரான்சும் நான்காம் இடத்தில் ஜேர்மனியும்(55 603) இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, இதேவேளை ஜரோப்பாவில் நெதர்லாந்து தொற்றைக்குறைப்பதற்காக இன்றுமுதல் நாட்டை முடக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஒமிக்ரோன் கொரோனா திரிபு இதுவரை 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிக தடுப்பூசி வீதம் கொண்டுள்ள இடங்களில் கூட இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் சமூகப் பரவல் உள்ள நாடுகளில் தொற்று நோயாளர் தொகை ஒவ்வொரு ஒன்றரை முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகிறது எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.