சிங்கள பேரினவாத முப்படைகளிற்கான காணி பிடிப்பு திருவிழா மும்முரமாகியுள்ளது.தமிழ் தலைவர்கள் நாடாளுமன்றில் மும்முரமாக உரையாற்றிக்கொண்டிருக்க காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான 51 பரப்பு காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கென முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நில அளவைத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் காணி அளவீடு செய்யவுள்ள நிலையில் காணி அளவீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த காணி உரிமையாளர்கள் மற்றும் உள்ளுர் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் எதிர்ப்புபோராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது
காரைநகர் ஜே-45 கிராமசேவகர் பிரிவில் எலோறா கடற்படை தளம் அமைப்பதற்காக 62 குடும்பங்களுடைய 51 ஏக்கர் காணி நிலஅளவை திணைக்களத்தால் இன்றைய தினம் அளவீடு செய்யப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினமும் காரைநகரில் கடற்படையினருக்கென காணிகளை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.