மீண்டும் சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்: லெபனானில் பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் !

You are currently viewing மீண்டும் சர்வதேச சட்டத்தை மீறிய இஸ்ரேல்: லெபனானில் பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் !

தெற்கு லெபனானில் (Lebanon) இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேல் (Israel) படையினருக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இந்த மோதலின் காரணமாக லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் அதிகமானோர் ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும், இஸ்ரேலின் தாக்குதல்களால் 70 இற்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வெள்ளை பாஸ்பரஸ் குண்டுத் தாக்குதல் என்பது பொதுமக்களுக்கு அதிகம் தீங்கு விளைவிக்கும் என்பதுடன் இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயற்பாடாகும்.

அத்துடன் இந்த தாக்குதலால், 173 பேர் வரை பாதிப்படைந்து மருத்துவ சிகிச்சை தேவைகள் ஏற்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனினும், வெள்ளை பொஸ்பரஸ் குண்டு தாக்குதல் மூலம் பொதுமக்களை குறிவைக்கவில்லை என இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply