கடந்த வருடம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தியாகதீபம் திலீபனின் நினைவு தாங்கிய ஊர்தி ஊர்வலத்தினை மிகச்சிறப்பாக முன்னெடுத்து மக்களின் பாராட்டுதலை பெற்றது யாவரும் அறிந்ததே, அதேபோன்று இம்முறையும் வவுனியாவில் இருந்து தியாகதீபம் திலீபனின் நினைவுகள் தாங்கி ஊர்திப்பயணம் நல்லூரை நோக்கி வர இருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளளது.
இதேவேளை சில ஊடகங்கள் குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சிதைப்பதற்காக இந்திய கைக்கூலிகளாக இயங்கும் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழ்தேசியக்கூட்டமைப்பு, தமிழ் மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மணிவண்ணன் இளைஞர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்து தியாகதீபம் திலீபனின் நினைவு சுமந்த போராட்டத்தினை முன்னெடுக்க இருப்பதாகவும் தமிழ்காங்கிரஸ் வவுனியாவில் இருந்து முன்னெடுக்க இருப்பதாகவும் கீரைக்கடைக்கு எதிர்கடையை துவங்க இருக்கும் இந்திய பின்னணியில் இயங்கும் சக்திகள் செய்திவெளியிட்டுள்ளனர்.திட்டமிட்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை தமிழ்க்காங்கிரஸ் என முத்திரை குத்த இவர்கள் படாத பாடு படுவது இப்படியான செயற்பாடுகளுக்கூடாக அப்பட்டமாக தெரியவருகின்றது.
மணிவண்ணன் அவர்களை தற்காலிகமாக உறுப்புரிமையில் இருந்து விலக்கியுள்ளதாகவும் அவர் கட்சியின் பெயரை பாவிக்கமுடியாது என்றும் தலைமையால் உத்தியோகபூர்வமாக நேற்று ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டபோதும் சில தமிழ்த்தேசிய சிதைப்பு ஊடகங்கம் தான்தோன்றித்தனமாக செய்தி வெளியிட்டுள்ளமை உண்மைக்கு புறம்பானதும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.