வடக்கில் உள்ள சில தரப்பினர் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப வடக்கில் வாழும் பொதுமக்களின் மனநிலையை மாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
2009 ம் ஆண்டு நடைபெற்ற போரின்போது லட்சக்கணக்கான தமிழர்களை மிகக் கொடூரமாக சிங்கள ராணுவம் படுகொலை செய்ததில் முக்கிய பங்காற்றிய கொடூர அணியான 58வது படையணியின் தளபதியாக அப்போது இருந்த சவேந்திரா சில்வா உத்தரவின் பேரில்தான் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர் அந்த இரத்தக்கறைகளுக்கு வெள்ளையடிக்க இன்று வடக்கில் உள்ள தமிழர்கள் தவறாக வழிநடத்தப்படவில்லை எனவும், மாறாக இராணுவத்தின் முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பேரினவாத சிங்கள அரசின் இராணுவத் தளபதி இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா தமிழர்களுக்கு இனிப்பில் விசத்தை தடவி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார்
சிங்கள் பேரினவாத அரசின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் (SFHQ-J) அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போதே இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.