துருக்கியைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஹெலின் போலக் துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று மரணமடைந்தார்.
28 வயதேயான இந்த இளம் இசைக்கலைஞர் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளார்.
அவர் ஒன்றும் நிறைவேற்ற முடியாத கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.
அவர் கேட்டதெல்லாம் தனது இசைக்குழுவிற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்கக்கோரியும் சிறைப்பிடிக்கப்பட்ட தனது சக கலைஞர்கள் ஏழு பேரை விடுவிக்குமாறும் மட்டுமே.
ஆனால் துருக்கி சர்வாதிகார அரசு அவர் கோரிக்கையை நிறைவேற்றவும் இல்லை. அவர் உயிரையும் காப்பாற்றவில்லை.
காந்தியின் தேசம் என்று அழைக்கப்படும் இந்தியாவே அகிம்சைப் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்கவில்லை என்பதை ஈழத்தில் திலீபன், அன்னைபூபதி உண்ணாவிரதங்களின்போது கண்டோம்.
இந்தியா மட்டுமல்ல துருக்கியும் அகிம்சைப் போராட்டத்தை மதிக்காது என்பதை இன்று காண்கிறோம்.
ஹெலின் மரணம் அவர் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்பது உண்மையே. ஆனால் அகிம்சை வழிப் போராட்டம் பயன்தாராது என்பதை மீண்டும் ஒரு தடவை அது உலகிற்கு நிரூபித்துள்ளது.
குறிப்பு – பட்டினிப்போரின் முன்னும் பின்னும் அவர் எவ்வாறிருந்தாரென்பதைக்காட்டும் படம் கீழே தரப்பட்டுள்ளது.
தோழர் பாலன்