மே 11, அதாவது திங்கட்கிழமை, அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதாக நோர்வேயின் பிரதமர் Erna Solberg (H) தெரிவித்துள்ளார் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் பாடசாலைகள் வழமைக்கு திரும்புவதோடு சாதாரண நாளாக மாற்றமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே மழலையர் பூங்கா, 1 தொடக்கம் 4 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள் மற்றும் உயர்நிலை வகுப்புகள் சிலவும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இனிவரும் காலங்களில் அனைத்துப்பாடசாலைகளும் மாணவர்களும் தயாராக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை சில பாடசாலைகள் திங்கள் திறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் சில பாடசாலைகளுக்கு தயார்படுத்தலுக்கான கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்தவாரம் எப்போது பாடசாலைகளை திறப்பது என்ற முடிவினை நகராட்சிகளும் பாடசாலைகளும் தீர்மானிக்கவேண்டுமென்று அறிவு மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் Guri Melby (V) தெரிவித்துள்ளார்.