தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் பொலிகண்டியில் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர். பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன
வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் குறிப்பிட்டனர்.
இதேவேளை மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் என பூச்சாண்டி சிறீலங்காவால் காட்டப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.