மீண்டும் விதிமுறைகளை மீறிய பிருத்தானிய பிரதமர்!

You are currently viewing மீண்டும் விதிமுறைகளை மீறிய பிருத்தானிய பிரதமர்!

கார் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், மீண்டும் தனது நாயால் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பத்தினர் மத்திய லண்டனின் நோவா தி லாப்ரடோர் ஹைட் பூங்காவில் நடந்து சென்றது தொடர்பான வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், பூங்காவில் வன விலங்குகளைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க அனைத்து நாய்களும் சரியாக வழிநடத்தப்பட வேண்டும் என அறிவிப்புகள் இருநத நிலையிலும், பிரதமர் ரிஷி சுனக்கின் செல்லப்பிராணி சுதந்திரமாக சுற்றித் திரிந்தது பொலிஸாரின் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மேலும் இது தொடர்பாக செவ்வாயன்று வெளியான பொலிஸ் அறிக்கையில், சம்பவ இடத்தில் இருந்த அதிகாரி ஒருவர், அங்கிருந்த பெண்ணிடம் பேசி விதிகளை நினைவூட்டினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியைக் குறிப்பிடுகிறது. ரிஷி சுனக்கின் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கடந்த ஜூன் 2020 இல் போரிஸ் ஜான்சனின் நிதியமைச்சராக பணியாற்றியபோது, சமூக விலகல் குறித்த அரசாங்கத்தின் கோவிட் விதிகளை மீறி, டவுனிங் ஸ்ட்ரீட் விருந்தில் கலந்து கொண்டதற்காக ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பின் சமீபத்தில் ஊடக பதிவிற்காக எடுக்கப்பட்ட வீடியோவில், ஓடும் காரில் சீட் பெல்ட் அணிய தவறியதற்காக ரிஷி சுனக்கிற்கு மீண்டும் பொலிஸாரால் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனது செல்லப் பிராணி தொடர்பான விதி மீறலில் பிரதமர் ரிஷி சுனக் பொலிஸாரால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply