புதிய கொரோனா வைரஸ் சீனாவிற்கு வெளியே முகக்கவசத்தின் தேவையை அதிகரித்துள்ளது, ஆனால் நோர்வே அதிகாரிகள் ஒருபோதும் முகக்கவசத்தை பயன்படுத்த பரிந்துரைக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல் போன்ற பல்வேறு வைரஸ்கள் வரும்போது பொதுவாக முகக்கவசம் பயன்படுத்தப்படுவது ஆசியாவின் சில பகுதிகளில் ஒரு கலாச்சார விடயமாகும் என்று பொது சுகாதார நிறுவனத்தில் (Folkehelseinstituttet) பணிபுரியும் உயர் மருத்துவர் ப்ரீபென் அவிட்ஸ்லேண்ட்(Preben Aavitsland ) VG செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் ‘நோர்வேயில் உள்ளவர்களுக்கு முகக்கவசம் பயன்படுத்துவதை FHI ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை’ என்றும் ‘நாங்கள் அதை செய்ய மாட்டோம்’ என்றும் கூறினார்.
அறியப்பட்ட பிற சுவாச வைரஸ்களைப் போலவே, புதிய கொரோனா வைரஸும் நீர்த்துளி தொற்று என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதைத் தடுப்பதற்கு முகக்கவசம் ஒரு பயனுள்ள, திறம்பட இயங்கக்கூடிய வழியாக இருக்காது என நம்புவதாக உயர் மருத்துவர் மேலும் தெரிவித்தார்.
முகக்கவசத்தை சரிசெய்ய கைகளால் முகத்தின் மேல் கவசத்தை தொடர்ந்து இழுப்பதால் கைகளிலிருந்து வைரஸ் முகத்தை வந்தடையும் என்றும் அதை தாங்கள் விரும்பவில்லை என்றும் உயர் மருத்துவர் அவிட்ஸ்லேண்ட்(Aavitsland) மேலும் கூறினார்.
‘ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால் தொற்றுநோயைத் தவிர்க்க வீட்டிலேயே இருக்கச் சொல்லுங்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்’ என்று உயர் மருத்துவர் அவிட்ஸ்லேண்ட்(Aavitsland) மேலும் கூறியுள்ளார்.