முகநூலின் 50 விழுக்காடு ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’(முகநூல்), ‘டுவிட்டர்’ (கீச்சகம்) ஆகியவையும் உத்தரவிட்டுள்ளன.
இந்தநிலையில் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் முகநூல் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான முகநூல் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவுள்ளனர்.
கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை ஊக்க ஊதியமாக வழங்க முகநூல் நிறுவனம் அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.