கிளிநொச்சி முகமாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
கிளிநொச்சி முகமாலை இந்திராபுரம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கயஸ் வாகனம் என்பன மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பளை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.