முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதியுதவி!

You are currently viewing முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்கு நிதியுதவி!

முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களில் இருந்து 50 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை உக்ரைனுக்கு நிதியுதவியாக அளிக்க G7 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. உக்ரைனை நாங்கள் கைவிடவில்லை என்பதை ரஷ்யாவுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆனால் G7 நாடுகளின் இந்த முடிவானது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த உதவித்தொகையானது இந்த ஆண்டு இறுதியில் அளிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. அத்துடன் உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே 10 ஆண்டு இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.

இந்த ஒப்பந்தமூடாக அமெரிக்க ராணுவம் உக்ரைன் துருப்புகளுக்கு பயிற்சி அளிக்கும். உக்ரைன் மீதான போருக்கு பின்னர் ஐரோப்பா உட்பட G7 நாடுகளால் ரஷ்யாவின் 325 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களில் இருந்து ஆண்டுக்கு 3 பில்லியன் டொலர் வட்டி கிடைப்பதாகவும், G7 நாடுகளின் திட்டத்தின் படி உக்ரேனியர்களுக்கான 50 பில்லியன் டொலர் கடனுக்கான வருடாந்திர வட்டியை செலுத்த இந்த 3 பில்லியன் டொலர் பயன்படுத்தப்படும் என்றே கூறப்படுகிறது.

முடக்கப்பட்டுள்ள 300 பில்லியன் டொலர் தொகையையும் விடுவிக்க வேண்டும் என்றே உக்ரைன் தரப்பில் இருந்து கோரி வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments