ரஷ்யாவை தோற்கடிக்கும் கனவு மேற்குலகத்துக்கு இருந்தால், தாராளமாக அதை முயற்சிக்கலாமென மேற்குலகத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சவால் விடுத்துள்ளதாக “Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடைசி உக்ரனிய குடிமகன் இருக்கும்வரையும் ரஷ்யாவை எதிர்த்து போர் செய்வதற்கு மேற்குலகம் உதவியாக இருக்கும் என மேற்குலகம் தெரிவித்துள்ளதும், ரஷ்யாவை எப்படியாவது தோற்கடிக்க மேற்குலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதும் தனக்கு நன்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ள ரஷ்ய அதிபர், மேற்குலகம் விரும்பினால் ரஷ்யாவை தோற்கடிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து பார்க்கலாமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலகத்தின் ரஷ்யாமீதான பொருளாதாரத்தடைகள் சிரமங்களை தோற்றுவித்துள்ளதை மறுப்பதற்கில்லை எனவும் ஒத்துக்கொண்ட ரஷ்ய அதிபர், எனினும், பொருளாதாரத்தடைகளை மேற்குலகம் விதித்ததன் பெறுபேறுகளை மேற்குலகம் முற்றாக அடையமுடியாதெனவும் குறிப்பிட்டுள்ளதோடு, உக்ரைனுடனான சமாதான முயற்சிகளுக்கு ரஷ்யா எப்போதும் தயாராகவே உள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளதாக “Reuters” மேலும் தெரிவிக்கிறது.