முதலில் குனிந்த முதுகை நிமிர்த்தி கட்டிவிட்டு அவரது இல்லத்திற்கு செல்லுங்கள்!

You are currently viewing முதலில் குனிந்த முதுகை நிமிர்த்தி கட்டிவிட்டு அவரது இல்லத்திற்கு செல்லுங்கள்!

தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் வடமராட்சிக்கு நேற்று சென்று, வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவரின் இல்லம் அமைந்திருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், அங்கு அமைக்கப்பட்டள்ள தியாகதீபம் திலீபன் நினைவுப் பந்தலில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கொள்கைளை இறுதிப்போர்வரை எவருக்கும் எள்ளளவும் விட்டுக் கொடுக்காத தேசியத்தலைவரின் வீட்டு முற்றத்தில் கால் படுவதற்கு அவரது கொள்கை வழி பயணிக்கும் அரசியல் தலைமைகளுக்கே தகுதி இருக்கின்றது.

வெறும் வெற்றுக்கோசத்திற்காக தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் கொள்கையை கைவிட்டுவிட்டு 13ம் திருத்தச்சட்டத்தை இதுவரை ஆதரித்து வந்த அரியநேந்திரனுக்கும் அவரது கூட்டணிக்கும் எந்த தகுதியும் இல்லை தலைவரது வீட்டுக் காற்றை சுவாசிப்பதற்கு.

முதலில் குனிந்த முதுகுகளை நிமிர்த்தி கட்டிவிட்டு அதற்கு பின் அவரது இல்லத்திற்கு செல்வதற்கு முயற்சியுங்கள்

மக்களை ஏமாற்றுவதற்கும் வாக்குகளை பெறுவதற்கும் படம்போட்டுக் காட்டாமல், மாவீரர் தியாகங்களை காயப்படுத்தாது, இந்தியாவுக்கு எடுபிடியாக இருக்காது, தமிழருக்கான அரசியலை செய்ய முற்படுங்கள் அதன் பின் தமிழினத்தின் தேசியத்தலைவர் மண்ணை முத்தமிடுங்கள் அப்போதுதான் ஆயிரம் ஆயிரமாய் விட்டுக்கொடுக்காத தமிழரின் அரசியலுக்காய் தியாகம் எய்திய மாவீரர் ஆத்மா உங்களை மன்னிக்கும் அதுவரை தயவுசெய்து தள்ளி நில்லுங்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply