முதலில் ரஷ்யாவுடன் சமாதானத்திற்கான பயனுள்ள உத்தரவாதங்களைப் பற்றி பேச வேண்டும்.டொனால்டு ட்ரம்ப்

You are currently viewing முதலில் ரஷ்யாவுடன் சமாதானத்திற்கான பயனுள்ள உத்தரவாதங்களைப் பற்றி பேச வேண்டும்.டொனால்டு ட்ரம்ப்

உடனடி போர்நிறுத்தம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் இந்த பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். டொனால்டு ட்ரம்பின் இந்த அழைப்பு, உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் ரஷ்ய ஜனாதி ஆகியோர் தங்களின் நிபந்தனைகளை பட்டியலிட தூண்டியது.

கடந்த மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்ற பிறகு, பாரிஸில் ஜெலென்ஸ்கியை நேருக்கு நேர் சந்தித்துப் பேசிய சில மணிநேரங்களுக்குப் பிறகு தனது கருத்துக்களை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் ஒரு முடிவைக் கொண்டுவருவதாக தேர்தல் பரப்புரையின் போதே உறுதியளித்திருந்தார், ஆனால் இதுவரை தமது திட்டம் தொடர்பில் அவர் எந்த விளக்கமும் வழங்கவில்லை.

இந்த நிலையில், ஜெலென்ஸ்கியும் உக்ரைனும் ஒரு ஒப்பந்தத்தின் ஊடாக இந்த பைத்தியக்காரத்தனத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக தளமான Truthல் பதிவு செய்துள்ளார்.

மேலும், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

எனக்கு விளாடிமிர் புடினை நன்கு தெரியும். அவர் செயல்பட வேண்டிய நேரம் இது. இந்த விவகாரத்தில் சீனாவால் உதவ முடியும். உலகமே காத்திருக்கிறது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Notre-Dame பேராலயம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாரிஸ் சென்றிருந்த டொனால்டு ட்ரம்ப், சுமார் ஒருமணி நேரம் ஜெலென்ஸ்கி மற்றும் இமானுவல் மேக்ரானுடன் தனியாக விவாதித்துள்ளார்.

ஆனால், இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ட்ரம்பின் போர்நிறுத்தம் தொடர்பான அழைப்புக்கு கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, அமைதி என்பது வெறும் காகிதத்தில் பதிவு செய்யப்படுபவை அல்ல, உத்தரவாதம் தேவை என்றார்.

ரஷ்யாவுடன் பயனுள்ள சமாதானத்தைப் பற்றி பேசும்போது, ​​முதலில் சமாதானத்திற்கான பயனுள்ள உத்தரவாதங்களைப் பற்றி பேச வேண்டும். உக்ரேனியர்கள் மற்றவர்களை விடவும் தற்போது அமைதியை விரும்புகிறார்கள் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply